மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

சென்னையில் மின்சார ரயில் சேவை அதிகரிப்பு!

சென்னையில் மின்சார ரயில் சேவை அதிகரிப்பு!

சென்னையில் ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (ஜூன் 14) முதல் மின்சார ரயில் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் நேற்று (ஜூன் 14) முதல் ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னை ரயில்வே கோட்டமும் மின்சார ரயில் சேவையை அதிகரித்துள்ளது.

ஏற்கனவே கடந்த 7ஆம் தேதி முதல் 208 ஆக இருந்த மின்சார ரயில் சேவையின் எண்ணிக்கையை, 279 ஆக சென்னை ரயில்வே கோட்டம் அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று முதல் மேலும் கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.

மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 113 மின்சார ரயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 60 சேவையும், சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கத்தில் 36 ரயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரயில் சேவையும் என 323 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன.

அதேபோல், ஆவடி - பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் நான்கு மின்சார ரயில் சேவையும், பட்டாபிராம் - பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 10 மின்சார ரயில் சேவையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று முதல் சென்னையில் 343 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டன. மேலும் 20ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் 98 மின்சார ரயில் சேவைகளும் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

-ராஜ்

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: உப்பு அடை!

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி மையத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : தேசிய கடலோர ஆராய்ச்சி   மையத்தில்  பணி!

சிறப்புக் கட்டுரை: வாழ்வில் ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது? ...

5 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: வாழ்வில்  ஏற்றத் தாழ்வுகளை எப்படி கையாள்வது?

செவ்வாய் 15 ஜுன் 2021