மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 15 ஜுன் 2021

ரிலாக்ஸ் டைம்: காலிஃபிளவர் துவரம்பருப்பு சூப்!

ரிலாக்ஸ் டைம்: காலிஃபிளவர் துவரம்பருப்பு சூப்!

சூப் செரிமானத்தின் நண்பன். விருந்துக்கு முன்பு உணவு மேசையில் வைக்கப்படும் முதல் தொடக்கம். சூப், நாவின் சுவை மொட்டுகளை சுவை அறியத் தயார்படுத்துவதுடன் பசி உணர்வைத் தூண்டவும் செய்கிறது. ஹெவியான இந்த சூப்பை ரிலாக்ஸ் டைமில் பருகலாம். ஒரு மணி நேரம் வரை பசி தாங்கும்.

எப்படிச் செய்வது?

கால் கப் துவரம்பருப்பைக் குழைய வேகவைத்து தனியே வைக்கவும். ஒரு கப் காலிஃபிளவரை உப்பு சேர்த்த வெந்நீரில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெயைப் போட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று, பச்சை மிளகாய் மூன்று, காலிஃபிளவர், நறுக்கிய தக்காளி இரண்டு சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து, நான்கு கப் நீர் விட்டு வேகவிடவும். பிறகு, காய்கறிகளை மத்தால் மசித்து, இரண்டு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள், ஒரு டேபிள்ஸ்பூன் சோளமாவுக் கரைசல், துவரம்பருப்பு, அரை கப் நீர் விட்டுக் கலந்து அடுப்பில் வைத்து ஓரிரு கொதி வந்ததும் இரண்டு டீஸ்பூன் நசுக்கிய பட்டை - சோம்பு, நறுக்கிய புதினாத்தழை ஒரு டேபிள்ஸ்பூன் தூவி இறக்கவும்.

குறிப்பு

தக்காளியை வதக்கும் முன் மேல் தோலை உரித்துவிட்டு, அரிந்து வதக்கவும்.

சிறப்பு

புரதம் நிறைந்தது. ஃபோலிக் அமிலம் நிறைவாக உள்ளதால், கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் உள்ள குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. பிறக்கும் குழந்தையை நியூரல் டியூப் பிரச்னைகளில் இருந்து காக்கிறது. கோலின் நிறைந்துள்ளதால், தசை வளர்ச்சிக்கும் மூளை செல்களின் வளர்ச்சிக்கும் நல்லது. நினைவுத்திறனை மேம்படுத்தும்.

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

பேருந்துகளில் சாதி, மத பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது!

3 நிமிட வாசிப்பு

பேருந்துகளில் சாதி, மத பாடல்கள் ஒலிபரப்பக் கூடாது!

செவ்வாய் 15 ஜுன் 2021