மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

வழக்கு தொடரப்பட்டதின் நோக்கம் நிறைவேறியுள்ளது: நீதிமன்றம்!

வழக்கு தொடரப்பட்டதின் நோக்கம் நிறைவேறியுள்ளது: நீதிமன்றம்!

எதிர்காலத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் தெரு விலங்குகளுக்கு உணவு கிடைப்பதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் தெரு விலங்குகளுக்கு உணவளிக்க கோரி சிவா என்பவர் தொடர்ந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இன்று(ஜூன் 14) மீண்டும் இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி அமர்வு முன்பு வந்தது. அப்போது, தெருவிலங்குகளுக்கு உணவளிக்க ஆளுநர் 10 லட்ச ரூபாய் நிதி வழங்கியதற்கும், தமிழ்நாடு அரசு 9.20 லட்சம் ரூபாய் நிதி விடுவித்ததற்கும் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

தனியார் மூலம் யானைகள் வளர்ப்பதற்கு தடை விதிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து எதிர்காலத்தில் நீதிமன்றம் பரிசீலிக்கும். அதுவரை அவை கண்ணியமாகவும், மனிதாபிமானமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்யும்படி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தெருவிலங்குகளின் பாதுகாப்பிற்கும், நாய்களுக்கான கருத்தடை நடைமுறையையும் மனிதாபிமான அடிப்படையில் செய்வதற்கும் திட்டம் வகுக்க வேண்டும். எதிர்காலத்தில் கொரோனா அதிகரித்து மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தால், அப்போது தெரு விலங்குகளுக்கு தடையில்லாமல் உணவு கிடைப்பதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடரப்பட்ட நோக்கம் நிறைவேறியுள்ளது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

-வினிதா

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

3 நிமிட வாசிப்பு

சென்னை காவல் ஆணையருக்கு நெஞ்சு வலி!

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

4 நிமிட வாசிப்பு

மாணவனை உதைத்த ஆசிரியருக்கு சிறை: கைதானது எப்படி?

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

3 நிமிட வாசிப்பு

தலைமைக் காவலரை நலம் விசாரித்த காவல் ஆணையர்!

திங்கள் 14 ஜுன் 2021