மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

ஹஜ் பயணத்துக்கு 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி!

ஹஜ் பயணத்துக்கு 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி!

கோவிட் பெருந்தொற்று பரவலால், இந்த ஆண்டு உள்நாட்டினர் 60,000 பேர் மட்டுமே ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர் என சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

முஸ்லிம்களின் புனித தலமான சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவுக்குப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஆண்டுதோறும் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஹஜ் புனித யாத்திரைக்கு அனுமதிக்கப்படுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் சுமார் 160 நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது வழக்கம். இந்த ஹஜ் புனித பயணத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்களும் ஆண்டுதோறும் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டு ஹஜ் புனித பயணம் ஜூலை மாதம் மத்தியில் தொடங்கவிருக்கிறது.

இந்த புனித பயணத்துக்கான அறிவிப்பை சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு, சவுதி அரேபியாவைச் சேர்ந்த 60,000 பேர் மட்டுமே ஹஜ் பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என ஹஜ் அமைச்சகம் கூறியுள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டும் கொரோனாவின் முதல் அலை காரணமாக ஹஜ் புனித பயணம் பாதிக்கப்பட்டிருந்தது. அப்போது ஏற்கனவே சவுதி அரேபியாவில் வசித்து வந்த வெளிநாட்டினர் 1,000 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

-ராஜ்

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

திங்கள் 14 ஜுன் 2021