மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 14 ஜுன் 2021

ஜாமீன் கிடைத்தவர்களுடன் இரண்டு கைதிகளும் விடுவிப்பு!

ஜாமீன் கிடைத்தவர்களுடன் இரண்டு கைதிகளும் விடுவிப்பு!

சாராய வழக்கில் ஜாமீன் கிடைத்தவர்களுடன் தவறுதலாக இரண்டு கைதிகளும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட சம்பவம் ஜெயங்கொண்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம்‌ ஜெயங்கொண்டம் சுற்றுவட்டாரப் பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் சாராய விற்பனையில் ஈடுபட்ட 27 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் 22 பேருக்கு அரியலூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து கைதிகளை ஜாமீனில் வெளியே விடுவதற்கான ஏற்பாடுகளை சிறை நிர்வாகத்தினர் செய்தனர்.

அப்போது ஆங்கிலம் புரிதல் இல்லாத காரணத்தினால், கீழப்பழுவூர் அருகே உள்ள மலத்தாங்குளத்தைச் சேர்ந்த வேளாங்கண்ணி ராபர்ட் (வயது 36), பாலகுமார் (22) ஆகியோரை தவிர்த்து என்பதைத் தவறாகப் புரிந்துகொண்டு, அவர்கள் இரண்டு பேரையும் சேர்த்து மொத்தம் 24 பேரை போலீஸார் ஜாமீனில் விடுவித்துள்ளனர்.

பின்னர், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பெயர்களை அதிகாரிகள் சரிபார்த்தபோது கூடுதலாக இரண்டு பேரை தவறுதலாக விடுவித்தது தெரியவந்தது. சாராய வழக்கில் கைதான அவர்கள் இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் அவர்கள் தவறுதலாக ஜாமீனில் அனுப்பப்பட்டுள்ளனர்.

இதைத்தொடர்ந்து வேளாங்கண்ணி ராபர்ட், பாலகுமார் ஆகியோரை சிறை சூப்பிரண்டு நடராஜ் மற்றும் அரியலூர் போலீஸார் உதவியுடன் வலைவீசி தேடி வந்தனர்.

போலீஸாரின் விசாரணையில், அவர்கள் இரண்டு பேரும் கைகாட்டியில் இருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், அப்பகுதியில் நேற்று மாலை சோதனையிட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வேளாங்கண்ணி ராபர்ட், பாலகுமார் ஆகியோரை போலீஸார் மடக்கிப்பிடித்து கைது செய்து, அரியலூர் சிறையில் அடைத்தனர்.

-ராஜ்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

திங்கள் 14 ஜுன் 2021