மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 ஜுன் 2021

ரவுடி காக்காதோப்பு பாலாஜி கைது!

ரவுடி காக்காதோப்பு பாலாஜி கைது!

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜியை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

வடசென்னையைச் சேர்ந்த காக்காதோப்பு பாலாஜி மீது 7 கொலை வழக்குகள், 20 கொலை முயற்சி வழக்கு என மொத்தம் 52 வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தின் கீழ் 10 முறை கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர். இந்நிலையில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த காக்காதோப்பு பாலாஜி தலைமறைவானதைத் தொடர்ந்து, தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், காக்காதோப்பு பாலாஜியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற ரவுடி, கீழே விழுந்ததில், கை,கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து ராயபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காக்காதோப்பு பாலாஜியுடன் இன்னொரு ரவுடியை கைது செய்த போலீசார், அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் கைதான சிடி மணியும், காக்காதோப்பு பாலாஜியும் கூட்டாளிகள். சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் டாப் 10 ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து, அவர்களை பிடிக்க தனிப்படை ஒன்றை அமைத்துள்ளார். அந்தப்பட்டியலில் முதல் இடத்தில் சிடி மணியும், இரண்டாவது இடத்தில் காக்காதோப்பு பாலாஜியின் பெயரும் இடம் பெற்றுள்ளது. அந்த பட்டியலில் உள்ள இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் மீதமுள்ள 8 பேரும் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரவுடிகளை கைது செய்ய அமைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீசார்கள் யார், எவ்வாறு செயல்படுகின்றனர் என்பது ஆணையரை தவிர வேறு யாருக்கும் தெரியாது என சொல்லப்படுகிறது.

-வணங்காமுடி

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

ஞாயிறு 13 ஜுன் 2021