மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 13 ஜுன் 2021

ரிலாக்ஸ் டைம்: கோல்டன் சூப்!

ரிலாக்ஸ் டைம்: கோல்டன் சூப்!

சமைத்து சாப்பிடும் காய்கறிகளைவிடவும், சற்றே கூடுதலான பலன்களை சூப் குடிப்பதன் மூலம் பெறலாம். உடலுக்கு வைட்டமின்கள், தாது உப்புகள், தேவையான அளவு கலோரிகள், புரதம் போன்றவை அதிகம் கிடைக்கும் சூப் வகைகளில் இந்த கோல்டன் சூப் சிறந்தது; அனைவருக்கும் ஏற்றது.

எப்படிச் செய்வது?

வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சூடானதும் நறுக்கிய வெங்காயம் ஒன்று, கேரட் இரண்டு, தக்காளி இரண்டு, பிரியாணி இலை ஒன்று சேர்த்து வதக்கி இரண்டு கப் நீர் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். வெந்ததும் பிரியாணி இலையை எடுத்துவிட்டு, மீதியை மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும். வடிகட்டிய நீரில் சோள மாவைக் கரைத்து ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து அடுப்பில் ஏற்றி, ஒரு கொதிவந்ததும் இறக்கி ஒரு டேபிள்ஸ்பூன் நறுக்கிய புதினா இலைகளைத் தூவி ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

சிறப்பு

பிரியாணி இலையில் நியாசின், பைரிடாக்ஸின், பேன்டோதெனிக் அமிலம், ரிபோஃபிளேவின் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இந்த சூப் நரம்பு மண்டலத்தை மேம்படுத்தும். பைல்ஸ், பெப்டிக் அல்சர், ஜீரண மண்டலக் கோளாறுகள், கவுட், சிறுநீரகப் பிரச்னைகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

ஞாயிறு 13 ஜுன் 2021