மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

ரூ.100-ஐ தாண்டிய பெட்ரோல் விலை: கவலையில் வாகன ஓட்டிகள்!

ரூ.100-ஐ தாண்டிய பெட்ரோல் விலை: கவலையில் வாகன ஓட்டிகள்!

கொரோனா காரணமாக பொது மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல தினசரி பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

பெட்ரோல் மற்றும் டீசலை அதன் விற்பனை நிலையங்களுக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து செலவையும் சேர்த்து அதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக, ஏற்கனவே ராஜஸ்தான் மத்திய பிரதேஷ் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் முதன்முறையாக இன்று பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்தது. சென்னையில் இன்றைய தினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 64 காசுகள் அதிகரித்து ரூ.97.43க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுபோன்று டீசல் விலை லிட்டருக்கு 22 காசுகள் உயர்ந்து ரூ. 91.46க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொடைக்கானலில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100 ரூபாய் 4 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள கொடைக்கானல் மலைக்கிராம விவசாயிகள் விளைந்த காய்கறிகளைச் சந்தைக்குக் கொண்டு செல்வதில் சிரமங்களைச் சந்திப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். எனவே எரிபொருளின் விலையைக் குறைப்பதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நேற்று நாடு தழுவிய போராட்டம் நடத்திய நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

சனி 12 ஜுன் 2021