மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

கொரோனா நிதி வழங்கிய மாற்றுத்திறனாளிக்கு ஆட்சியர் நிதியுதவி!

கொரோனா நிதி வழங்கிய மாற்றுத்திறனாளிக்கு ஆட்சியர் நிதியுதவி!

மகனின் படிப்பு செலவுக்காக வாங்கிய இரண்டு கன்றுக் குட்டிகளை விற்று கொரோனா நிவாரண நிதி வழங்கிய மாற்றுத்திறனாளிக்கு மாவட்ட ஆட்சியர் நிதியுதவி வழங்கினார்.

கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு சிறுவர் முதல் அனைத்து தரப்பினரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இன்னும் சிலர் தங்களின் ஏழ்மையைக் கூட பொருட்படுத்தாமல் நிதியுதவி அளித்து வருகின்றனர். நாகையில் உடற்கல்வி ஆசிரியர் புத்தநேசன் என்பவர், தன்னுடைய ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்து அதன்மூலம் கிடைத்த தொகையை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்தார். இதுபோன்று பலரும் நிகரற்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்தவர் கா.ரவிச்சந்திரன். 52 வயதான இவர் பார்வைக் குறைப்பாடு கொண்ட மாற்றுத்திறனாளி. இவரின் 100 நாள் வேலை மூலம் கிடைக்கும் சம்பளம், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆகியவற்றை வைத்துதான் குடும்பத்தை நடத்தி வருகிறார். இவரது மனைவி மகேஷ்வரி (42). இவர்களின் மகன்களான பிரசாந்த் (20) கல்லூரியில் படிக்கிறார், சஞ்சய் (17) பிளஸ் 2 முடித்துள்ளார்.

தன் இளைய மகனைக் கல்லூரியில் சேர்க்க, கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வைத்த பணத்தில் இரண்டு கன்றுக் குட்டிகளை வாங்கி வளர்த்து வந்துள்ளார்.

அப்போது, கொரோனா நிவாரண நிதிக்குப் பொதுமக்கள் நிதி வழங்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளின்படி, ரவிச்சந்திரனும் நிவாரண நிதி வழங்க முடிவு செய்தார். இதற்காக வளர்த்து வந்த இரண்டு கன்றுக் குட்டிகளையும் விற்று கிடைத்த ரூ. 6 ஆயிரத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவிடம், கடந்த ஜூன் 9ஆம் தேதி வழங்கினார். நிதியைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், ரவிச்சந்திரனை பாராட்டினார்.

இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அறிவுரையின்படி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் இன்று(ஜூன் 12) காலை ரவிச்சந்திரனின் வீட்டுக்கே நேரில் சென்று தன் விருப்ப நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.

இந்த நிதியுதவியை வாங்க மறுத்த ரவிசந்திரன்,” இதெல்லாம் வேண்டாம், இதை நான் எதிர்பார்க்கவில்லை” என்று கூறியுள்ளார். அதற்கு ஆட்சியர், ''உங்களைப் போன்றவர்களை அரசு சார்பில், இப்படித்தான் கவுரவப்படுத்த முடியும். இதை மகனின் படிப்புச் செலவு, குடும்ப வாழ்வாதாரத்துக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' எனக் கூறி காசோலையை வழங்கினார்.

ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நீர்நிலைகளை மீட்டல், மக்களுக்கு உதவித்தொகை பெற்று தருதல் உள்ளிட்ட சமூக சேவைகளையும் செய்து வருகிறார் ரவிச்சந்திரன்.

-வினிதா

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

சனி 12 ஜுன் 2021