மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

பாலியல் தொல்லை: அடுத்தடுத்து சிக்கும் பள்ளி ஆசிரியர்கள்!

பாலியல் தொல்லை: அடுத்தடுத்து சிக்கும் பள்ளி ஆசிரியர்கள்!

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து, பல்வேறு கல்லூரி பள்ளி ஆசிரியர்கள் மீது முன்னாள் மாணவர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதுதொடர்பான ஸ்க்ரீன் ஷாட்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

பத்மசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை தொடர்ந்து கராத்தே பயிற்சி மாஸ்டர் கெபிராஜ் மற்றும் பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் எனப் பல ஆசிரியர்கள் மீது புகார் அளிக்கப்பட்டன. அவர்கள் மீது போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாக அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் புகார் தெரிவித்தனர்.

இவ்வாறு அடுத்தடுத்து பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், அந்த வரிசையில், பி எஸ் சீனியர் செகண்டரி பள்ளி மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

“இந்த பள்ளியைச் சேர்ந்த 8 ஆசிரியர்கள் மீது முன்னாள் மாணவிகள் பாலியல் குற்றம் சாட்டி அதுதொடர்பான ஸ்க்ரீன் ஷாட்களை தொகுத்துள்ளனர். இந்த 8 ஆசிரியர்களில் ஒருவர் பெண் குழந்தைகளைத் தவறாகப் படமெடுத்துள்ளார்” என்று பாடகி சின்மயி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஞானசேகரன், குருமூர்த்தி பத்மநாபன், கலைமணி, பிரபாகரன், சிவகுமார், வெங்கடராமன், ரவிச்சந்திரன், சாய்பிரசாத் ஆகியோர் பாலியல் தொந்தரவு கொடுப்பது மற்றும் தவறாக படமெடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் மாணவிகள் கூறியுள்ளனர்.

“மாதவிடாய் காரணமாக அதிக வலி இருந்ததால் ஒரு நாள் பள்ளிக்கு விடுமுறை எடுக்க வேண்டியிருந்தது. மறுநாள் பள்ளிக்குச் சென்ற போது சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஏன் பள்ளிக்கு வரவில்லை என கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பினார். உடல் நிலை சரியில்லை என்று சொன்னாலும், அந்த பதிலை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் பள்ளிக்கு வராததன் காரணத்தை தெரிந்து கொண்டு, அதை என் வாயால் சொல்லச் சொல்லி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி இந்த வலி வாழ்க்கை முழுவதும் உனக்கு இருக்கும். இதற்காக விடுமுறை எடுப்பாயா என்று கேள்வி எழுப்பினார். அப்போது அவரது பார்வை தவறாக இருந்தது” என்று ஒரு மாணவி கூறியுள்ளார்.

இதுபோன்று, மாணவிகளை தவறாக பார்ப்பது, புகைப்படம் எடுப்பது, தொட்டு பேசுவது போன்ற செயல்களில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர் என்று மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

-பிரியா

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

சனி 12 ஜுன் 2021