மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

மேட்ரிமோனியில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மேட்ரிமோனியில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஊரடங்கு காலத்தில் மேட்ரிமோனி உள்ளிட்ட திருமண வலைதளங்களில் பதிவு செய்வோர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கிலேயே வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது. இதனால், வணிகம், நிறுவனங்கள் பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்தாலும், திருமண வலைதளங்கள் வழக்கத்தை விட சிறப்பாக செயல்படுகின்றன.

இதுகுறித்து மேட்ரிமோனி.காமின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி முருகவேல் ஜானகிராமன் கூறுகையில், ”இரண்டாம் அலையின் ஊரடங்கு காலத்தில் தங்கள் திருமண வலைதளத்தில் பதிவுசெய்தவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. காலாண்டு இடைவெளியில் இரட்டை இலக்கில் வளர்ச்சி விகிதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் முதல் அலையின்போது போடப்பட்ட ஊரடங்கில் திருமண பதிவுகளின் எண்ணிக்கை 35 சதவிகிதமாக இருந்தது. தற்போதைய ஊரடங்கில் சற்று குறைந்தது. இருப்பினும் இது வளர்ச்சியே. கொரோனா இரண்டாம் அலை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொருவரும் தங்கள் அன்பானவர்களை இழந்தார்கள். எல்லாம் இயல்பு நிலைக்கு வரும் என்ற நம்பிக்கையில் மக்கள் இருக்கிறார்கள். இந்த நிதியாண்டில் எப்படியும் இரட்டை இலக்கு வளர்ச்சி நிலையை எட்டிவிடுவோம்” என தெரிவித்துள்ளார்.

ஷாடி.காமின் மார்க்கெட்டிங் இயக்குநர் ஆதிஷ் சவேரி கூறுகையில், ”கடந்த சில ஆண்டுகளாக திருமண வலைதள தொழில்கள் சிறப்பாக செயல்படுகின்றன. முதல் அலையின்போது திருமண வலைதளத்தில் பதிவு செய்வோர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 30 முதல் 50 சதவிகிதம்வரை இருந்தது. புதிதாக பதிவு செய்வோர்களின் எண்ணிக்கை 35-40 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்த காலத்தில் எங்களது வணிகம் நிலையான வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறது. ஊரடங்கு காலத்தில் நேரில் சென்று பெண், மாப்பிள்ளை பார்ப்பது சிரமம் என்பதால், மேட்ரிமோனி தளத்தில் வீடியோ கால் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டது. இதன்மூலம் ஒருவர், மற்றொருவரிடம் பேசி புரிந்து கொள்ளவும் முடிந்தது. இந்த பயன்பாடு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது, பெரும்பாலான திருமணங்கள் நடைபெறுவதற்கு தயார் நிலையில் இருக்கின்றது” என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் மேட்ரிமோனி மூலம் திருமணமான சூர்யா கூறும்போது, “நாங்கள் வேலைகளில் அதிக ஈடுபாடும், ஆர்வமுடன் உள்ளதால், திருமணம் செய்வதை தள்ளிப் போட்டு வந்தோம். ஆனால், , நேரம் யாருக்காகவும் காத்திருக்காது, திட்டங்களை தாமதப்படுத்தக் கூடாது என்பதை நோய் தொற்று எங்களுக்கு கற்று கொடுத்தது” என்று கூறினார்.

-வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 12 ஜுன் 2021