மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 12 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: மஷ்ரூம் சுக்கா

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: மஷ்ரூம் சுக்கா

சைவம் உண்பவர்களையும், அசைவம் உண்பவர்களையும் கவரும் லிஸ்ட்டில் மஷ்ரூமுக்கு தனி இடம் உண்டு. பல வெரைட்டி உணவுகளை மஷ்ரூமில் செய்யலாம். இந்த மஷ்ரூம் சுக்காவை பத்து நிமிடங்களில் சமைத்துவிடலாம். ஹோட்டல் ருசியை நம் வீட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். சாம்பார், ரசம் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன் இந்த சுக்கா.

என்ன தேவை?

பட்டன் காளான் - 200 கிராம்

சின்ன வெங்காயம் - 150 கிராம்

மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள், சோம்புத்தூள் - தலா அரை டீஸ்பூன்

மஞ்சள்தூள் - சிறிது

பொடியாக நறுக்கிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன்

நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

சோம்பு - ஒரு டீஸ்பூன்

பூண்டு - 15 பல்

எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது?

காளானை விருப்பமான வடிவில் நறுக்கவும். சின்ன வெங்காயத்தை நீளவாக்கிலும், பூண்டை வட்டமாகவும் நறுக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு காளான் சேர்த்து உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், நறுக்கிய தேங்காய், சீரகத்தூள், சோம்புத்தூள் சேர்த்து வதக்கவும். அடுப்பை சிறு தீயில்வைத்து, மூடிபோட்டு காளானை 3 நிமிடம் வேகவிடவும். பிறகு மூடியைத் திறந்து தண்ணீர் சுண்ட (காளானில் இருந்து வெளிப்படும் தண்ணீர்) வதக்கி, மிளகுத்தூள் சேர்த்துக் கிளறி, இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

குறிப்பு:

இந்த ரெசிப்பிக்கு, வெங்காயம் அதிகம் தேவைப்படும். சின்ன வெங்காயத்துக்கு பதில் பெரிய வெங்காயமும் சேர்க்கலாம்.

நேற்றைய ரெசிப்பி - வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

சனி 12 ஜுன் 2021