மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்க வேண்டும்!

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதிக்க வேண்டும்!

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்க அனுமதித்திட வேண்டும் என்று மதுரையில் இயங்கும் (Madurai District Tiny & Small Scale Industries Association - MADITSSIA) மடீட்சியா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மடீட்சியா தலைவர் முருகானந்தம் இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “கொரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக கடந்த 30 நாட்களாக மூடப்பட்டிருக்கும் நிலையில் சிறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆர்டர் பெற்ற நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வங்கியில் பெற்ற கடனுக்கான மாத தவணை செலுத்த முடியாமலும், ஊழியர்களுக்கு மாத ஊதியம் வழங்க முடியாமலும் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கடந்த 7ஆம் தேதி தமிழக அரசு சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்தபோது சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு தமிழக அரசு விலக்கு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சிறு தொழில் நிறுவனங்கள் இயங்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவில்லை. தற்போது தமிழகத்தில் ஓரிரு மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. ஆகவே விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டித் தரும் சிறு தொழில் நிறுவனங்களின் நலன் கருதி சிறு தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு விதித்துள்ள தடையை நீக்கி வழக்கம் போல செயல்பட அனுமதி வழங்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

-ராஜ்

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

வெள்ளி 11 ஜுன் 2021