மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வேலைக்கு அழைத்து செல்லப்படுகிறார்களா?

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வேலைக்கு அழைத்து செல்லப்படுகிறார்களா?

ஊட்டி ஊராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்கு அழைத்து செல்லப்படுகிறார்களா என்பதை ஊராட்சி தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட்ட அழகர் மலை, கடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர், கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட சக்தி நகர், பாக்யம் நகர் ஆகிய பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு கொரோனா பரவலைத் தடுக்க சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா, காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படுகிறதா, கிருமிநாசினி தெளிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தார்.

மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளிநபர்கள் வருவதையும், உள்ளே இருந்து விவசாயம் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு அழைத்து செல்லப்படுகிறார்களா என்பதையும் ஊராட்சி தலைவர்கள் கண்காணிக்க வேண்டும். கிருமிநாசினி மூலம் தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.

உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து அந்தந்த பகுதிகளில் தினமும் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து ஆலோசித்து, அதைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, “தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், ஆர்சனிக் ஆல்பம், ஜிங்க் மாத்திரைகள் தொடர்ந்து வழங்க வேண்டும். வீடு, வீடாக ஆய்வு செய்து இருமல், சளி, காய்ச்சல் உள்பட 13 வகையான அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தென்பட்டாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது” என்று கூறினார்.

-ராஜ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

வெள்ளி 11 ஜுன் 2021