மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

தென்னக ரயில்வே: சரக்கு - பார்சல் சேவையில் ரூ.442 கோடி வருவாய்!

தென்னக ரயில்வே: சரக்கு - பார்சல் சேவையில் ரூ.442 கோடி வருவாய்!

பயணிகள் ரயில்கள் குறைவான எண்ணிக்கையில் இயங்கிவரும் நிலையில் சரக்கு மற்றும் பார்சல் சேவை மூலம் ரூ.442 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பஸ் போக்குவரத்துக்குத் தடை விதித்துள்ளது. ஆனால், ரயில் சேவையில் பயணிகள் ரயில்கள் மட்டும் குறைவான எண்ணிக்கையில் இயங்கி வருகிறது.

முப்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சரக்கு ரயில்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன. இதற்கிடையே தென்னக ரயில்வே சரக்கு மற்றும் பார்சல் சேவையில் அதிக லாபத்தை ஈட்டியுள்ளது.

நடப்பு நிதி ஆண்டில் (2021-22) ஏப்ரல் - மே மாதங்களில் சரக்கு மற்றும் பார்சல் சேவை மூலம் வருவாய் அதிகரித்துள்ளது. இதில் நிலக்கரி, இரும்பு மற்றும் எஃகு ஆலைகளுக்கான மூலப்பொருள், சிமென்ட், உணவு தானியங்கள், உரங்கள், பெட்ரோலிய பொருட்கள், ஆட்டோ மொபைல்கள், கொள்கலன்கள் உள்ளிட்டவைகளை சரக்கு ரயில் மூலம் தமிழகம் முழுவதும் கொண்டு செல்லப்பட்டது.

இதன் மூலம் தென்னக ரயில்வேயின் ஒட்டுமொத்த சரக்கு வருவாய் ரூ.427.35 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டைவிட 52.89 சதவிகிதம் அதிகமாகும். மேலும் பார்சல் சேவையைப் பொறுத்தவரை நடப்பு நிதி ஆண்டில் 29,000 டன்களை ஏற்றியது. இதன் மூலம் பார்சல் போக்குவரத்தின் வருமானம் ரூ.14.92 கோடியாகவும் உள்ளது. இது கடந்த ஆண்டைவிட ரூ.3.46 கோடி அதிகமாகும். மேற்படி தகவலை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.

-ராஜ்

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வெள்ளி 11 ஜுன் 2021