மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

ரிலாக்ஸ் டைம்: கம்பு வெஜிடபிள் கஞ்சி!

ரிலாக்ஸ் டைம்: கம்பு வெஜிடபிள் கஞ்சி!

மாறிவரும் தட்பவெப்ப நிலையில், மந்தமான தற்போதைய சூழ்நிலையில் ரிலாக்ஸ் டைமில் இந்தக் கஞ்சி செய்து அருந்துவது உடனடி புத்துணர்ச்சியைத் தரும். அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியமானது.

எப்படிச் செய்வது?

ஊறவைத்த அரை கப் கம்புடன் தேவையான அளவு கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், சிறிதளவு பட்டை, கிராம்பு சேர்த்து வேகவைத்து அரைத்த வெஜிடபிள் ஸ்டாக் மூன்று கப், தலா அரை டீஸ்பூன் சீரகம், மிளகு, இரண்டு ஏலக்காய், ஒரு பிரியாணி இலை, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் இரண்டு கப் நீர் சேர்த்து வேகவைக்கவும். பிரியாணி இலையை எடுத்துவிட்டு, வெந்த கலவையை மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் மூன்று டீஸ்பூன் எண்ணெய்விட்டு அரை டீஸ்பூன் கடுகு, மூன்று பூண்டு பற்கள் சேர்த்துத் தாளித்து, அரைத்த சூப் கலவையில் சேர்த்துக் கொதிக்கவிடவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் அல்லது ஸ்டாக் சேர்த்துக்கொள்ளவும். இதில் அரை மூடி எலுமிச்சைப் பழச்சாறு, தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

சிறப்பு

இதில் இரும்புச்சத்து மிக அதிகம். ரத்தசோகை இருப்பவர்களுக்கு ஏற்ற உணவு. கர்ப்பிணிகள் அவசியம் சாப்பிடவேண்டிய உணவு. குழந்தைகளுக்கும் அடிக்கடி தரலாம்.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வெள்ளி 11 ஜுன் 2021