மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

திருப்பதி: முன்பதிவு செய்தவர்கள் டிசம்பர் வரை தரிசிக்கலாம்!

திருப்பதி: முன்பதிவு செய்தவர்கள் டிசம்பர் வரை தரிசிக்கலாம்!

திருப்பதியில் டிக்கெட் முன்பதிவு செய்து தரிசன நேரத்துக்கு வர இயலாதவர்கள் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை தரிசனம் செய்யலாம் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலால் திருப்பதியில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நடைபாதையும் மூடப்பட்டுள்ளது. ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மற்றும் விஐபி தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் தினசரி 10,000 பக்தர்கள் வரை தரிசனத்துக்கு வருகின்றனர். நாடு முழுவதும் பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் திருப்பதிக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே தேவஸ்தானம் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை தரிசனம் செய்து கொள்ள கால நீட்டிப்பு வழங்கியுள்ளது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

வெள்ளி 11 ஜுன் 2021