மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 11 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வத்தக்குழம்பு

காரக்குழம்பு, சுண்டக்குழம்பு என்று பல காரமான குழம்பு வகைகள் இருந்தாலும் வத்தக்குழம்புக்கு இணை வேறில்லை என்பது உணவு ரசிகர்களின் அபிப்பிராயம். அத்துடன் வீட்டில் வைக்கும் வத்தக்குழம்பை விட ஹோட்டலில் வைக்கும் வத்தக்குழம்புக்கு மவுசு அதிகம். அப்படிப்பட்ட ஹோட்டல் ஸ்டைல் பாரம்பரியமான வத்தக்குழம்பை வீட்டிலேயே செய்து பாருங்கள். காரசாரமான இந்தக் குழம்பு, உங்கள் தினசரி குழம்புகளிலிருந்து வித்தியாசமான ருசியைத் தரும். நூறு சதவிகிதப் பாராட்டைப் பெறும்.

என்ன தேவை?

சுண்டைக்காய் வற்றல் – கால் கப்

நல்லெண்ணெய் ‍– 100 மில்லி

மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்

சீரகத்தூள் – 2 டீஸ்பூன்

மல்லித்தூள் – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

கடுகு – கால் டீஸ்பூன்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

சின்ன வெங்காயம் – 12

புளித்தண்ணீர் – சிறிதளவு

பூண்டு – 6 பல்

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் நசுக்கிய பூண்டு சேர்த்து வறுக்கவும். பிறகு அதனுடன் சின்ன வெங்காயத்தை முழுதாகச் சேர்த்து 2 நிமிடங்களுக்கு வதக்கவும். அதனுடன் சுண்டைக்காய் வற்றல் சேர்த்து பிறகு மிளகாய்த்தூள், சீரகத்தூள், மல்லித்தூள் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்க்கவும். கறிவேப்பிலை மற்றும் புளிக்கரைசல் சேர்த்து தண்ணீர் ஊற்றி அதனுடன் உப்பு போட்டுக் கொதிக்க விடவும். குழம்பு பத்து நிமிடங்களுக்கு நன்றாகக் கொதித்தால்தான் அது கெட்டியாகி எண்ணெய் தளர்ந்து சாப்பிடும் பதத்துக்கு வரும். பிறகு எடுத்துப் பரிமாறவும்.

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

வெள்ளி 11 ஜுன் 2021