மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

புதுச்சேரி: மதுபாட்டில்கள் டோர் டெலிவரி!

புதுச்சேரி: மதுபாட்டில்கள் டோர் டெலிவரி!

புதுச்சேரி மாநிலத்தில் மது விற்பனை தொடங்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு மது பாட்டில்களை வாடிக்கையாளர்களுக்கு டோர் டெலிவரி செய்ய புதுச்சேரி அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

புதுச்சேரியில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி முதல் ஜூன் 7ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பகுதி நேர ஊரடங்கு அமலில் இருந்தது. தொற்றின் எண்ணிக்கை குறைய தொடங்கியதை அடுத்து, ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்திருக்கிறது அரசு. குறிப்பாக அனைத்துவிதமான மதுக்கடைகளும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம் மது பார்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதுதொடர்பாக புதுச்சேரி காவல்துறை ஆணையர் சுதாகர் தலைமையில் மதுக்கடை உரிமையாளர்களுடன் மது பார்களைத் திறப்பது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது ‘மதுக்கடைகளில் அனைவரும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். மது வாங்க வருபவர்கள் மட்டுமல்லாமல், மதுக்கடை ஊழியர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். மது வாங்க வருபவர்களுக்கு வெப்பப் பரிசோதனை செய்வதுடன், அவர்களுக்குக் கிருமி நாசினியும் வழங்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இந்த விதிகளைப் பின்பற்றாத மதுக்கடைகளின் உரிமம் சஸ்பெண்ட், ரத்து செய்யப்படும் என்று கலால்துறை கடுமையான எச்சரிக்கை விட்டிருக்கிறது. மேலும் மதுக்கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டோர் டெலிவரி செய்ய அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

கலால்துறை விதிமுறைகளுக்கு உட்பட்டு மதுபான கடைகள் இந்த முறையைக் கடைப்பிடிக்கலாம் என்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மட்டும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்றும் கூறப்பட்டிருக்கிறது. அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆன்லைன் செயலி மூலமும், போன் மூலமும் வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை டோர் டெலிவரி செய்வதற்கான பணிகளைத் தொடங்கியிருக்கின்றனர் மதுக்கடை உரிமையாளர்கள்.

-ராஜ்

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

3 நிமிட வாசிப்பு

பாலியல் தொல்லை: அதிமுக பிரமுகர் கைது!

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

3 நிமிட வாசிப்பு

10-11 வகுப்பு பொதுத் தேர்வு: இதுவே கடைசி வாய்ப்பு!

வேலைவாய்ப்பு : இஎஸ்ஐசி-யில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு :  இஎஸ்ஐசி-யில் பணி!

வியாழன் 10 ஜுன் 2021