மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

ரிலாக்ஸ் டைம்: ஸ்வீட் கார்ன் தக்காளி சூப்!

ரிலாக்ஸ் டைம்: ஸ்வீட் கார்ன் தக்காளி சூப்!

சைவ உணவுகளிலும், அசைவ உணவுகளிலும் முதன்மையான இடம்பிடிக்கும் தக்காளி, ஆரோக்கியத்திலும் முதலிடம் வகிக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தக்காளியை தினமும் உணவில் சேர்த்துகொள்வது மிகவும் நல்லது. அப்படிப்பட்ட தக்காளியுடன் ஸ்வீட் கார்ன் சேர்த்து இந்த சூப் செய்து அருந்துங்கள். ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

எப்படிச் செய்வது?

ஒரு கப் ஸ்வீட் கார்னை உப்பு சேர்த்து வேகவைத்து, தனியே வைக்கவும். இரண்டு தக்காளியை வெந்நீரில் பத்து நிமிடங்கள் போட்டு எடுத்துத் தோலை உரித்து, இரண்டு பச்சை மிளகாயுடன் சேர்த்து அரைக்கவும். அடிகனமான பாத்திரத்தில், அரைத்த தக்காளி - பச்சை மிளகாய் விழுதுடன் வெந்த சோளத்தைச் சேர்த்துக் கொதிக்கவிடவும். நீரில் சோள மாவைக் கரைத்து ஊற்றவும். ஒரு கொதி வந்ததும் தேவையான அளவு மிளகுத்தூள், மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

சிறப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வியாழன் 10 ஜுன் 2021