மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 10 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: டிபன் சாம்பார்

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: டிபன் சாம்பார்

வீட்டில் இட்லி, தோசை செய்யும்போது அதற்குத் தொட்டுக்கொள்ள சாம்பார் வைக்கும்போது, ஹோட்டல்களில் உள்ள சாம்பார் சுவை போல இல்லையே என்று நினைப்பவர்கள் அநேகர். அவர்களுக்கு இந்த டிபன் சாம்பாரைச் செய்து கொடுங்கள். இன்னும் கொஞ்சம் ஊற்று என்று இட்லி, தோசை, பொங்கலுடன் பிசைந்து அடிப்பார்கள்.

என்ன தேவை?

பாசிப்பருப்பு - கால் கப்

தக்காளி - 2

கேரட் - ஒன்று

கத்திரிக்காய் - ஒன்று

உருளைக்கிழங்கு - ஒன்று

கீறிய பச்சை மிளகாய் - 8 (காரத்துக்கேற்ப)

புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்

தோலுரித்த சின்ன வெங்காயம் - 10

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

வெல்லம் - ‍‍சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க

காய்ந்த மிளகாய் - ஒரு கப்

தனியா (மல்லி) - ஒரு கப்

சீரகம் - ‍ஒரு டீஸ்பூன்

உளுத்தம்பருப்பு ‍- 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

வெந்தயம் - ‍ஒரு டீஸ்பூன்

மஞ்சள்தூள் - சிறிதளவு

பெருங்காயம் ‍- சிறிதளவு

எண்ணெய் - அரை டீஸ்பூன்

தண்ணீர் - அரைப்பதற்குத் தேவையான அளவு

தாளிக்க

கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்

வெந்தயம் - கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

கேரட், உருளைக்கிழங்கு, கத்திரிக்காயை சதுரமான துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். புளியைத் தண்ணீ ரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி அதனுடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேகவைக்கவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் தாளிக்க கொடுத்துள்ளவற்றைச் சேர்த்து சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வறுத்து அரைத்த விழுது, காய்கறிகள், புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

காய்கள் வெந்ததும், வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கொதிவிடவும். கடைசியாக வெல்லம், கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

நேற்றைய ரெசிப்பி - வீட்டிலேயே ஹோட்டல் சுவை - பேபிகார்ன் ஃப்ரை

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

வியாழன் 10 ஜுன் 2021