மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

காவல்துறையினரை அச்சுறுத்துவதை ஏற்க முடியாது!

காவல்துறையினரை அச்சுறுத்துவதை ஏற்க முடியாது!

கொரோனா பெருந்தொற்று காலத்தில், காவல்துறையினர் தங்கள் கடமையைச் செய்யும்போது, அவர்களை அச்சுறுத்தும் வகையில் நடக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் மென்மையாக இருக்காது என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை எச்சரித்துள்ளது.

கடந்த மே 28ஆம் தேதி திருச்சி போர்ட் ஸ்டேஷன் அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெப்பக்குளத்தான் கரைப் பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் முகக்கவசம் அணியாமல் ஆட்டோவில் பயணித்துள்ளனர். ஆட்டோவில் வந்தவர்களை நிறுத்தி போலீஸார் விசாரித்துள்ளனர். அப்போது போலீஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இளைஞர்கள் போலீஸாரை கீழே தள்ளி விட்டுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி திருச்சியைச் சேர்ந்த காஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று (ஜூன் 8) விசாரித்த நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ், "கொரோனா காலத்தில் காவல்துறையினரின் பணி முக்கியமானது. நெருக்கடியான காலத்திலும், காவல்துறையினர் தங்களது பணிகளைச் செய்கிறார்கள். ஏற்கனவே அதிகளவிலான மன உளைச்சல், அழுத்தத்துடன் காவல்துறையினர் பணி செய்துவருகிற நிலையில், அவர்களை அச்சுறுத்துவது மேலும் மன உளைச்சலை உண்டாக்கும்.

காவல்துறை கேட்கும் கேள்விகளுக்கு உரிய முறையில் பொதுமக்கள் விளக்கமளிக்க வேண்டும். காவல்துறையினரை துஷ்பிரயோகம் செய்வது, அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவது போன்றவற்றை ஏற்க இயலாது. காவல்துறையினர் அச்சுறுத்தப்படும் விவகாரங்களில், நீதிமன்றம் மென்மையாக இருக்காது. ஒரு வைரஸ் பலரது உயிரை எடுத்துச் செல்லும் சூழலில், ஒவ்வொருவரும் தங்களுடைய பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்று கூறினார்.

மனுதாரர் காவல்துறையினரிடம் நடந்துகொண்ட விதத்துக்கு மன்னிப்பு கேட்டு, இதுபோன்று இனிமேல் நடக்காது என்று நீதிமன்றப் பதிவாளரிடம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த வழக்கை ஜூன் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை மனுதாரரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

சென்னையிலும் இருவேறு இடங்களில் இதுபோன்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

5 நிமிட வாசிப்பு

இந்துக்களை மட்டுமே நியமிக்க முடியும்: தமிழ்நாடு அரசு!

புதன் 9 ஜுன் 2021