மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

சின்ன வெங்காயம் போலி விதை: இழப்பீடு வழங்காவிட்டால் போராட்டம்!

சின்ன வெங்காயம் போலி விதை: இழப்பீடு வழங்காவிட்டால் போராட்டம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்ன வெங்காயம் போலி விதைகளை விற்பனை செய்து மோசடி செய்த தனியார் விதை விற்பனை நிலையம் இழப்பீடு வழங்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கள்ளிபாளையத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையத்தில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மந்திரிப்பாளையம், குள்ளம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிடுவதற்காக விதைகளை வாங்கி நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்துள்ளார்.

நான்கு மாதங்களுக்குப் பிறகு அறுவடை செய்த விவசாயிகள் சின்ன வெங்காயத்திற்கு மாற்றாக பெரிய வெங்காயம் விளைந்துள்ளதால் அதிர்ச்சியடைந்து விசாரித்ததில் போலி விதைகள் விற்பனை செய்யப்பட்டது அம்பலமானது.

இதுகுறித்து விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டபோது, திண்டுக்கல்லைச் சேர்ந்த தனியார் விதை உற்பத்தியாளரிடம் இருந்து விற்பனை நிலையத்தார் வாங்கியது தெரியவந்தது.

போலி விதை விற்பனை விவகாரம் குறித்து அரசு வேளாண் இணை இயக்குநருக்கு புகார் தெரிவித்ததை அடுத்து விளைநிலங்களில் ஆய்வு மேற்கொண்டதில் போலி விதைகள் என்பது உறுதியானது.

இந்த நிலையில் ஏக்கர் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலவாகியுள்ளதாகத் தெரிவித்த விவசாயிகள், இழப்பீடு தொகையை விதை உற்பத்தி நிறுவனம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளார். உரிய இழப்பீடு வழங்காதபட்சத்தில் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜ்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

புதன் 9 ஜுன் 2021