மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கடைசித் தேதி ஜூன் 20

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு கடைசித் தேதி ஜூன் 20

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இந்த மாதம் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர்களுக்கான தேசிய விருது வழங்கப்படுகிறது. இவ்விருதினை பெறும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 50,000 தொகை காசோலை, வெள்ளிப்பதக்கம் மற்றும் சான்றிதழ் ஆகியவை டெல்லியில் குடியரசு தலைவரால் வழங்கப்படும்.

இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த மாதம் 20ஆம் தேதிக்குள் https://nationalawardstoteachers.education.gov.in/ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு நாடு முழுவதிலும் இருந்து 45 ஆசிரியர்களுக்கும் சிறப்புப் பிரிவில் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் இருவருக்கும் தேசிய நல்லாசிரியர் விருதை மத்தியக் கல்வி அமைச்சகம் வழங்கியது. கொரோனா காரணமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணொலி முறையில் விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தில் இருந்து சென்னை அசோக் நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி, விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோர் தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் பெற்றனர்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

புதன் 9 ஜுன் 2021