மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் சிசிடிவி கேமரா!

கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் சிசிடிவி கேமரா!

தமிழகம் முழுவதும் உள்ள கிராம பஞ்சாயத்து அலுவலங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தெற்குதிட்டை கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் ஊராட்சி மன்ற கூட்டத்தில் கீழே அமர வைக்கப்பட்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராஜகுரு என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில், தமிழகத்தில் உள்ள பஞ்சாயத்துகளில் தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் சாதி ரீதியாக பாரபட்சமாகவும், பாகுபாடுகளுடனும் நடத்தப்படுகின்றனர். தலித் தலைவர்களை தேசியக் கொடி ஏற்ற அனுமதிப்பதில்லை, அவர்களுக்கு பஞ்சாயத்து அலுவலகங்களில் இருக்கைகள் வழங்கப்படுவதில்லை. ஆவணங்களை பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. பெண் பஞ்சாயத்துத் தலைவர்கள் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

”கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் 6 ஊராட்சி மன்ற தலைவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர், தமிழகத்திலுள்ள பஞ்சாயத்து அலுவலகங்களில் சாதி ரீதியிலான குற்றங்களை கட்டுப்படுத்த சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை இன்று(ஜூன் 9) விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, இதுகுறித்து தமிழக அரசு நான்கு வாரத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

புதன் 9 ஜுன் 2021