மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

ஆன்லைன் தேர்வு: மலை உச்சிக்குச் சென்ற மாணவர்கள்!

ஆன்லைன் தேர்வு: மலை உச்சிக்குச் சென்ற மாணவர்கள்!

மிசோரம் மாநிலத்தில் கல்லூரி செமஸ்டர் ஆன்லைன் தேர்வு எழுத கிராமத்தில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் கல்லூரி மாணவர்கள் மலை உச்சிக்குச் சென்று தேர்வு எழுதி வருகின்றனர்.

மிசோரம் மாநிலம் ஷைஹா மாவட்டத்தில் மௌரி என்ற மலைக்கிராமம் அமைந்துள்ளது. 1,700 பேரை மொத்த மக்கள்தொகையாகக் கொண்ட இந்தக் கிராமத்தில் ஏழு மாணவர்கள் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

இதற்கிடையில், அந்த மாணவர்கள் பயிலும் கல்லூரியில் தற்போது செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. மௌரி மலைக்கிராமம் என்பதால் அந்த மாணவர்களுக்குத் தங்கள் செல்போனில் போதிய சிக்னல் கிடைக்காமல் தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில், ஆன்லைன் தேர்வு எழுதுவதற்குப் போதிய செல்போன் சிக்னல் வேண்டும் என்பதால் அந்த ஏழு மாணவர்களும் தங்கள் கிராமத்தில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை உச்சிக்கு நடந்தே சென்றனர்.

மலை உச்சிப் பகுதியில் போதிய சிக்னல் கிடைப்பதால் அங்கு சிறிய குடிசை போன்ற அமைப்பை உருவாக்கினர். மழை போன்ற காலநிலையை சமாளிப்பதற்காக வாழையிலையில் கூரை அமைத்து அந்தக் கூடாரத்தில் மாணவர்கள் தங்கள் கல்லூரி ஆன்லைன் தேர்வை எழுதி வருகின்றனர்.

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க போதிய சிக்னல் இல்லாததால் சிக்கல் ஏற்படுவதாகவும் அரசு தங்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் எனவும் கல்லூரி மாணவர்கள் சங்கமும் அந்த ஊர் மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ராஜ்

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

புதன் 9 ஜுன் 2021