மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 9 ஜுன் 2021

ஜூன் மூன்றாவது வாரத்தில் பிளஸ் 1 வகுப்புகள் தொடக்கம்!

ஜூன் மூன்றாவது வாரத்தில் பிளஸ் 1 வகுப்புகள் தொடக்கம்!

பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளைப் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு எனத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளையும் பொதுத்தேர்வு எழுதாமல் மாணவர்கள் 11ஆம் வகுப்புக்குத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலைப் பிரிவுகளில் ஏற்கனவே சேர்க்கை அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு உட்பட்டு மாணவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம். ஒவ்வொரு பிரிவிலும், அனுமதிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் 10 முதல் 15 சதவிகிதம் வரை கூடுதலாக சேர்க்கை நடத்தலாம்.

குறிப்பிட்ட பாடப்பிரிவுகளுக்கு அதிக விண்ணப்பங்கள் வந்தால், தொடர்புடைய பாடங்களில் (50 வினாக்கள்) கொள்குறிவகை தேர்வை நடத்தி, அதன் மூலம் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்தலாம்.

பிளஸ் 1 மாணவர்களுக்கு ஜூன் மூன்றாவது வாரத்தில் வகுப்புகளைத் தொடங்க வேண்டும். பிளஸ் 2 மாணவர்களுக்குக் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், தொலைத்தொடர்பு முறையிலும் பாடங்களை நடத்த வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு அறிவிப்பில், "ஜூன் 14ஆம் தேதி முதல் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் என அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும். சான்றிதழ் விநியோகம், மதிப்பெண் வழங்குவது, மாணவர் சேர்க்கை, கற்றல் – கற்பித்தல் பணி, விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையைச் சுத்தம் செய்தல், மாணவர்களின் கல்வி தொலைக்காட்சி சார்ந்த கற்றல் நிகழ்வுகளை மேற்பார்வை செய்வது உள்ளிட்ட பணிகளுக்காகப் பள்ளிக்கு வர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

புதன் 9 ஜுன் 2021