மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 ஜுன் 2021

ஓராண்டில் ஓசி பயணம் செய்த 27.57 லட்சம் பேர்; ரூ.144 கோடி அபராதம்!

ஓராண்டில் ஓசி பயணம் செய்த 27.57 லட்சம் பேர்; ரூ.144 கோடி அபராதம்!

கொரோனா கெடுபிடிகளையும் மீறி கடந்த நிதியாண்டில் (2020-2021) ரயில்களில் 27 லட்சத்து 57,000 பேர் டிக்கெட் இல்லாமல் பிடிபட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம் ரூ.144 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர், கடந்த நிதியாண்டில் (2020-2021) ரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ரயில்வே வாரியம் பதில் அளித்துள்ளது.

அதில், “கடந்த நிதியாண்டில் ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் சிறப்பு டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், டிக்கெட் எடுக்காமலும், அதிகாரபூர்வமற்ற டிக்கெட் வைத்திருந்ததாலும் 27 லட்சத்து 57,000 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.143 கோடியே 82 லட்சம் வசூலிக்கப்பட்டது.

ஆனால், முந்தைய நிதியாண்டில் (2019-2020) பிடிபட்டவர்களில் இது 25 சதவிகிதத்தைவிட குறைவுதான். அப்போது 1 கோடியே 10 லட்சம் பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து ரூ.561 கோடியே 73 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டின் தொடக்கத்தில் (ஏப்ரல் மாதம்) இருந்தே ரயில்கள் ஓடவில்லை. கடந்த ஆண்டு மே 1ஆம் தேதியில் இருந்துதான், புலம்பெயர் தொழிலாளர்களுக்காகச் சிறப்பு ரயில்கள் ஓடத் தொடங்கின. முன்பதிவில்லா பெட்டிகள், முன்பதிவு இருக்கை பெட்டிகளாக மாற்றப்பட்டு இயக்கப்பட்டன.

நடைமேடை சீட்டுகள் வழங்கப்படவில்லை. உறுதி செய்யப்பட்ட டிக்கெட்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இவ்வளவு கெடுபிடிகளையும் மீறி 27 லட்சத்து 57,000 பேர் டிக்கெட் இல்லாமல் பிடிபட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

-ராஜ்

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்! ...

5 நிமிட வாசிப்பு

மூன்று வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் டிபி பரிசோதனை அவசியம்!

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

3 நிமிட வாசிப்பு

பெரியார் சிலை அவமதிப்பு: இருவர் மீது குண்டாஸ்!

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : அஞ்சல் துறையில் பணி!

செவ்வாய் 8 ஜுன் 2021