மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 ஜுன் 2021

தடுப்பூசிகளை வீணடித்தால் ஒதுக்கீடு குறைக்கப்படும்!

தடுப்பூசிகளை வீணடித்தால் ஒதுக்கீடு குறைக்கப்படும்!

ஜூன் 21 முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமலாக உள்ள நிலையில், கொரோனா தடுப்பூசிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது.

இந்தியாவில், தொடக்கத்தில் முன்களப் பணியாளர்கள், முதியோர்கள், இணைநோயுடன் கூடிய 45 வயதினருக்கு மேற்பட்டவர்கள் ஆகியோருக்கான தடுப்பூசிகளை ஒன்றிய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு விநியோகம் செய்தது. 18-44 வயதுடையவர்களுக்கான தடுப்பூசியை அந்தந்த மாநில அரசே கொள்முதல் செய்து கொள்ளலாம் என ஒன்றிய அரசு அறிவித்தது.

அதனால், உற்பத்தியாளர்களிடம் இருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தடுப்பூசிகளை மாநிலங்கள் கொள்முதல் செய்தன. போதிய அளவு தடுப்பூசி கிடைக்காததால், பல மாநிலங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், 18-44 வயதுடையவர்களுக்கான தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தன. இதுகுறித்து உச்ச நீதிமன்றமும் ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், நேற்று தொலைக்காட்சி வாயிலாக மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 21 ஆம் தேதி முதல் புதிய தடுப்பூசி கொள்கை அமலுக்கு வரும். அதன்படி, மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கும் என தெரிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு பல்வேறு மாநில முதல்வர்கள் வரவேற்பு அளித்தாலும், மிக தாமதமாக இம்முடிவை மத்திய அரசு எடுத்திருப்பதால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோயிருப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்திருந்தார்.

தற்போது புதிய தடுப்பூசி கொள்கையின் வழிகாட்டு நெறிமுறைகளை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. அதில், மாநிலங்களில் மக்கள் தொகை எண்ணிக்கை, கொரோனா பாதிப்பு அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும். தடுப்பூசிகளை மாநிலங்கள் வீணடித்தால் ஒதுக்கப்படும் எண்ணிக்கை குறைக்கப்படும். தனியார் மருத்துவமனைகள் சரியான விலையில் தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்திற்குள் 25 கோடி கோவிஷீல்டு, 19 கோடி கோவாக்சின் என மொத்தம் 44 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆர்டர் தரப்பட்டுள்ளது. 30 லட்சம் பயோலாஜிக்கல்-இ தடுப்பூசியும் செப்டம்பருக்குள் கிடைக்கும். பயோலாஜிக்கல்-இ நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசி வாங்க ரூ.1500 கோடி மத்திய அரசு செலுத்தியுள்ளது. மூன்று நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யும் 74 கோடி தடுப்பூசி மாநிலங்களுக்கு பிரித்து வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

-வினிதா

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மாணவி தற்கொலை: தஞ்சை எஸ்.பி விளக்கம்!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்! ...

4 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல்: சென்னையில் மூன்று புதிய மேம்பாலங்கள்!

செவ்வாய் 8 ஜுன் 2021