மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 ஜுன் 2021

விளம்பரத்துக்காகவே வழக்குகள் தாக்கல் செய்யப்படுகிறது!

விளம்பரத்துக்காகவே வழக்குகள் தாக்கல் செய்யப்படுகிறது!

கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கோவையை சேர்ந்த பூமிராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு பொதுநல வழக்குகளை தொடர்ந்திருந்தார். அதில், ”கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்ய நிவாரணம் வழங்க வேண்டும். அவர்களது வாரிசுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

மற்றொரு மனுவில்,”கோவையில் சிறப்பு கவனம் செலுத்தி கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த இரண்டு மனுக்களையும் இன்று(ஜூன் 8) நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு விசாரித்தது. அப்போது, அரசின் கொள்கை முடிவுகளை எதிர்த்து தொடரக்கூடிய பெரும்பாலான பொதுநல வழக்குகள் விளம்பரத்துக்காகவே தாக்கல் செய்யப்படுகிறது என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது என்றும் தெரிவித்தனர்.

மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவை நீதிமன்ற தலையீடு இல்லாமல் தொடர வேண்டுமென விருப்பம் தெரிவித்த நீதிபதிகள், கோவை பகுதியில் தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதால், அந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. தேவைப்பட்டால் நீதிமன்றம் தாமாக வழக்கை எடுத்து விசாரிக்கும் என்று கூறிய நீதிபதிகள், இரு வழக்குகளையும் முடித்து வைத்தனர்.

-வினிதா

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

செவ்வாய் 8 ஜுன் 2021