மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 8 ஜுன் 2021

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே ஹோட்டல் சுவை: வடகறி

சென்னையில் உணவுப் பிரியர்களுக்கு சைதாப்பேட்டை என்றாலே நாக்கை சப்புக்கொட்ட செய்யும் 'வடகறி' தான் நினைவுக்கு வரும். சைதாப்பேட்டை வட்டாரத்தில் மட்டுமே சுவைத்துக்கொண்டிருந்த இந்த வடகறியை, அதன் அதிகாரபூர்வமற்ற பிராண்டு அம்பாசிட்டராக இருந்து தமிழகம் முழுவதும் அறியச் செய்ததன் பெருமை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனையே சாரும்.

ஒரு திரைப்படத்தில் அவர் உதிர்த்த 'சப்பாலங்கிரி கிரி கிரி, சைதாப்பேட்டை வடகறி' என்ற வசனம் சைதாப்பேட்டை வடகறியின் பிராண்டு ஸ்லோகன் ஆனது. வடகறி என்றால் சைதாப்பேட்டை எப்படி நினைவுக்கு வருகிறதோ, அதேபோல சைதாப்பேட்டை மக்களுக்கு வடகறி என்றால் நினைவுக்கு வருவது சைதாப்பேட்டையில் இயங்கி வரும் 'மாரி ஓட்டல்'. அந்த ருசியை நீங்களும் உணர இந்த வடகறியை வீட்டிலேயே செய்து ருசிக்கலாம். இந்த வடகறி இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி என எல்லா காலை உணவுகளுக்கும் பிரதான சைடிஷ் ஆக இருக்கும்.

என்ன தேவை?

கடலைப்பருப்பு - ஒரு கப்

காய்ந்த மிளகாய் - 3

சோம்பு - ஒரு டீஸ்பூன்

வெங்காயம் - ஒன்று

தக்காளி - 2

இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

தனியாத்தூள் - ஒரு டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

பட்டை - 2

கிராம்பு - 2

பிரியாணி இலை - 1

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - ஒரு கொத்து

கொத்தமல்லித்தழை - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, காய்ந்த மிளகாய், சோம்பு, உப்பு சேர்த்துக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் சிறிய வடைகளாகப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுத்துக் கொள்ளவும். மீண்டும் கடாயில் சிறிது எண்ணெய்விட்டு காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பின்னர் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.

தக்காளியை தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்துச்சேர்க்கவும். பின்னர் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்னர் தயாராக உள்ள வடைகளைச் சிறிது சிறிதாகக் கிள்ளிப்போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.

நேற்றைய ரெசிப்பி - பனீர் பட்டர் மசாலா

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

2 நிமிட வாசிப்பு

சிறையில் ’ஏ கிளாஸ்’ அறை கேட்ட சிவசங்கர் பாபா

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: அரசு நீர்வளத்துறையில் பணி!

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா ...

4 நிமிட வாசிப்பு

ரூபாய் நோட்டுகளைக் கூடுதலாக அச்சிடும் திட்டம் இல்லை: நிர்மலா சீதாராமன்

செவ்வாய் 8 ஜுன் 2021