மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

வீழ்ச்சியைச் சந்தித்துள்ள மே மாத ஜிஎஸ்டி வசூல்!

வீழ்ச்சியைச் சந்தித்துள்ள மே மாத ஜிஎஸ்டி வசூல்!

ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூலைவிட இந்தாண்டு மே மாத ஜிஎஸ்டி வசூல் 27.6 சதவிகிதம் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவலால் ஊரடங்கு இருந்த நிலையில், ஜிஎஸ்டி வரி வருவாய் தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், “மே மாதத்தில் 1 லட்சத்து 2,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. புத்தாண்டு முதல் ஜிஎஸ்டி வருவாய் அதிகரித்து வந்த நிலையில், தற்போது கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தால் மே மாத வசூலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மொத்த வருவாயில் மத்திய ஜிஎஸ்டி மூலம் ஈட்டப்பட்ட 17,593 கோடியும், மாநில ஜிஎஸ்டி மூலம் ஈட்டப்பட்ட 22,653 கோடி ரூபாயும், ஒன்றிணைந்த ஜிஎஸ்டி மூலம் ஈட்டப்பட்ட 53,199 கோடி ரூபாயும் அடங்கும்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட் பெருந்தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக 2021 மே மாதத்துக்கான வரி விவரங்களை தாக்கல் செய்வதற்கான தாமத கட்டண தள்ளுபடி / வட்டி குறைப்பு (15 நாட்களுக்கு) உள்ளிட்ட பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூன் 4 வரை உள்நாட்டு பரிவர்த்தனைகளில் வசூலான ஜிஎஸ்டி வருவாய் இதுவாகும்.

ஆனால், கடந்த வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, ஜிஎஸ்டி வருவாய் இந்தாண்டு 65 சதவிகிதம் அதிகமாக உள்ளது. கடந்த வருடத்தின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, சரக்கு இறக்குமதி மூலம் வசூலான வருவாய் 56 சதவிகிதம் அதிகமாகவும், உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் வசூலான வருவாய் 69 சதவிகிதம் அதிகமாகவும் உள்ளது.

மே மாதத்துக்கு வருவாய் குறைந்திருந்தாலும், தொடர்ந்து எட்டாவது மாதமாக ஜிஎஸ்டி வருவாய் ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

-ராஜ்

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

திங்கள் 7 ஜுன் 2021