மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் உரிமம் ரத்து!

அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் உரிமம் ரத்து!

கொரோனா தொற்று சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

டி.ஐ.நாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கொன்றில், ”கொரோனா தொற்று சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், தனியார் மருத்துவமனைகளை அரசு தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து இலவச சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கை இன்று(ஜூன் 7) தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில், முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் சேராதவர்கள் சிகிச்சை பெற ஏதுவாக தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயித்து அரசாணை பிறப்பித்துள்ளதாகவும், தற்போது அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிக அளவில் உள்ளதால் அதையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்யப்படும். அதுதொடர்பாக, புகார் அளிக்க தனி பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை பதிவு செய்த நீதிபதிகள், கூடுதல் கட்டண வசூல் தொடர்பான புகார்களை முறையாக கையாண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும். மருத்துவமனைகள் லாப நோக்குடன் செயல்படுவது கண்டறிந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கான வருமான உச்ச வரம்பை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விஷயத்தில் மாநில அரசு, கருணையுடன் பரிசீலிக்கும் எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

-வினிதா

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

2 நிமிட வாசிப்பு

‘பள்ளிக்கு போங்க தம்பி’: கரூர் மாவட்ட ஆட்சியர்!

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

4 நிமிட வாசிப்பு

குவைத்தில் வீட்டு வேலை: பெண்கள் விண்ணப்பிக்கலாம்!

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

3 நிமிட வாசிப்பு

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த மாணவர்!

திங்கள் 7 ஜுன் 2021