மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

அரசு பள்ளிகளின் தரம் : நிபுணர் குழு அமைக்க உத்தரவு!

அரசு பள்ளிகளின் தரம் : நிபுணர் குழு அமைக்க உத்தரவு!

அரசு பள்ளிகளின் மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நிபுணர் குழு அமைக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் ஊதிய விகிதம் நிர்ணயிக்க, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணிக்காலத்தையும் சேர்த்துக் கொள்ளக் கோரி தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று(ஜூன் 7) நீதிபதிகள் கிருபாகரன், தமிழ்செல்வி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழ்நாடு கல்வித்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீலகண்டன், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அடிப்படைக் கல்வித்தரத்தினை உயர்த்தவும், அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு அனைத்து ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என தெரிவித்தார்.

இதையடுத்து, அரசு பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் நிபுணர் குழு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அரசுப் பள்ளிகளை அருகிலுள்ள தொழில் நிறுவனங்கள் தத்தெடுத்து உள்கட்டமைப்பினை மேம்படுத்துவது குறித்தும் கல்வித்துறை ஆலோசிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை 8 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

அபிமன்யு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

திங்கள் 7 ஜுன் 2021