மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

இன்று முதல் வங்கி வேலை நேரம் குறைப்பு!

இன்று முதல் வங்கி வேலை நேரம் குறைப்பு!

தமிழகத்தில் ஊரடங்கைச் சில தளர்வுகளுடன் வருகிற 14ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் வங்கிப் பரிவர்த்தனைகள், ஏற்கனவே அறிவித்தது போல பகல் 2 மணி வரை மட்டும் நடைபெறும் என்றும் வங்கி வேலை நேரத்தையும் வருகிற 13ஆம் தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது.

அதன்படி வங்கி கிளைகள், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வங்கிப் பரிவர்த்தனைகள் ஏற்கனவே அறிவித்ததுபோல பகல் 2 மணி வரை மட்டும் நடைபெறும். மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் வழக்கம்போல, மாலை 5 மணி வரை செயல்படும். கிளைகளில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்கள், மாற்று முறையில் செயல்பட வேண்டும்.

ரொக்கப் பரிவர்த்தனை, ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு என்இஎஃப்டி எனும் தேசிய மின்னணு நிதி பரிமாற்றம், ஐஎம்பிஎஸ் எனும் உடனடி கட்டண சேவை மற்றும் ஆர்டிஜிஎஸ் என்ற ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் அனுப்பும் சேவை, நிகழ்நேர மொத்த தொகை செலுத்துதல் போன்ற சேவைகளை வழங்க வேண்டும்.

அரசு வர்த்தகம், காசோலை பரிவர்த்தனை சேவைகளை அளிக்க வேண்டும். ஏடிஎம், ரொக்கம் செலுத்தும் எந்திரம் போன்றவை செயல்படுவதை வங்கிக் கிளைகள் உறுதி செய்ய வேண்டும்.

இந்தத் தகவல்கள், தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

-ராஜ்

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

திங்கள் 7 ஜுன் 2021