மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 7 ஜுன் 2021

ரிலாக்ஸ் டைம்: ப்ரைம்ஸ்டோன் ஜூஸ்

ரிலாக்ஸ் டைம்: ப்ரைம்ஸ்டோன் ஜூஸ்

மாம்பழ சீசனில் மாம்பழ ஜூஸ் குடிக்கவிட்டால் எப்படி? மாம்பழத்துடன் ஆரஞ்சு, சாத்துக்குடி சேர்த்து இந்த ப்ரைம்ஸ்டோன் ஜூஸ் செய்து அருந்துங்கள். செரிமானப் பிரச்சினை இருப்பவர்களும் இந்த ஜூஸை அருந்தலாம். மூட்டுவலி, இதயநோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் இந்த ஜூஸை அதிகம் பருகலாம்.

எப்படிச் செய்வது?

தலா பாதியளவு ஆரஞ்சு, சாத்துக்குடிச் சுளைகளில் தோல் மற்றும் விதைகளை நீக்கி, மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுக்கவும். இதனுடன், ஒரு மாம்பழத்தைத் தோல், கொட்டை நீக்கி, துண்டுகளாக நறுக்கி தேவையான அளவு நாட்டு சர்க்கரை, ஐஸ் கட்டிகள் சேர்த்து, மீண்டும் மிக்ஸியில் நன்றாக அரைத்துப் பருகவும்.

சிறப்பு

இந்த ஜூஸில் வைட்டமின் ஏ மற்றும் ஃபிளேவனாய்டு இருப்பதால், கண்களுக்கு நல்லது. இந்த ஜூஸில் உள்ள தாமிரம், ரத்தச் சிவப்பு அணுக்கள் உற்பத்திக்கு உதவும். பொட்டாசியம் சத்து, இதயம் சீராகச் செயல்பட உதவும்.

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

திங்கள் 7 ஜுன் 2021