மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

டாஸ்மாக் கடைகள்: மேலாண் இயக்குநர் அறிவிப்பு!

டாஸ்மாக் கடைகள்: மேலாண் இயக்குநர் அறிவிப்பு!

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் இயங்குவது குறித்து டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்தாலும், இன்னும் சில மாவட்டங்களில் தொற்று அதிகமாகவே இருக்கிறது. அதனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதன்படி,காய்கறி, மளிகைக்கடைகள் போன்ற சில கடைகள் மற்றும் சில நிறுவனங்கள் மட்டும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், டாஸ்மாக் கடை இயங்க அனுமதி இல்லை.

இந்த நிலையில், டாஸ்மாக் மேலாண் இயக்குநர் சுப்ரமணியன், அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை தமிழக அரசின் மறு உத்தரவு வரும் வரை,மூடுமாறு அனைத்து மூத்த பிராந்திய மேலாளர்களுக்கும், மாவட்ட மேலாளர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு அடிக்கடி சென்று கடைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து மாவட்ட மேலாளர்களும் விழிப்புடன் இருக்கவும், சட்டவிரோதமாக மதுபான விற்பனை இல்லை என்பதை உறுதிப்படுத்தவும், ஊரடங்கு காலகட்டத்தில் கடைகளில் திருட்டு நடப்பதைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் காவல் துறையுடன் ஒருங்கிணைந்து எடுக்கப்பட வேண்டும்.

அதிகார எல்லைக்கு உட்பட்ட கடைகளில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்த மாவட்டத்தில் உள்ள தடை அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து கடைகளிலும் நிறுவப்பட்டுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களும் சரியாகச் செயல்படுவதையும், அந்தக் காட்சிகள் பதிவு செய்யப்படுவதையும் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : மருத்துவத் துறையில் பணி!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

ஞாயிறு 6 ஜுன் 2021