மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

கொரோனா: மாமனாரைத் தோளில் சுமந்த மருமகள்!

கொரோனா: மாமனாரைத் தோளில் சுமந்த மருமகள்!

மருமகளைப் பழிவாங்க கட்டிப்பிடித்து கொரோனா தொற்றைப் பரப்பிய மாமியாரின் விரோதச் செயல், தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அசாமில் கொரோனா பாதித்த மாமனாரைத் தோளில் சுமந்து மருத்துவமனைக்குச் சென்ற மருமகளின் செயல் அனைவராலும் பாராட்டு வருகிறது.

அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வருபவர் 75 வயது துலேஷ்வர் தாஸ். இவர் மகன் சூரஜ். திருமணமாகி மனைவி நிகாரிகாவை வீட்டில் விட்டுவிட்டு வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டார். இதனால் வீட்டில் மாமனாரை நிகாரிகா கவனித்து வந்தார்.

இதற்கிடையே துலேஷ்வர் தாஸுக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஊரடங்கு நேரத்தில் போக்குவரத்து இல்லாததால் மாமனாரை எப்படி மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது என்று நிகாரிகா யோசித்தார்.

தாமதித்தால் உயிருக்கு ஆபத்து என்பதை உணர்ந்த அவர் சிறிதும் தாமதிக்காமல் கொரோனா பாதித்த தன் மாமனாரை தோளில் சுமந்து, கிடைத்த வாகனம் மூலம் அருகில் இருந்த மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்காகச் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது..

இந்த நிலையில், மாமனாரைத் தோளில் சுமந்து வந்ததால் நிகாரிகாவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கும் தொற்று உறுதியானது. அவரை வீட்டுத் தனிமையில் இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

தனக்கு கொரோனா வந்தாலும் பரவாயில்லை என்று தன்னலம் பாராமல் மாமனாரைத் தோளில் சுமந்து சென்று பொறுப்புடன் செயல்பட்ட நிகாரிகாவுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

-ராஜ்

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

ஞாயிறு 6 ஜுன் 2021