மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

தமிழகம்: புதிதாக 20,412 பேருக்கு தொற்று!

தமிழகம்: புதிதாக 20,412  பேருக்கு தொற்று!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,37,233 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத் துறை இன்று மாலை வெளியிட்ட அறிவிப்பில், “ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த 3 பேர் உட்படத் தமிழகத்தில் இன்று (ஜூன் 6) 20,412 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனால் மொத்த பாதிப்பு 22,37,233ஆக உயர்ந்துள்ளது. இதில், 2,44,289 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 434 பேர் உட்பட இதுவரை 27,005 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 2,80,28,680 பேருக்குப் பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. இன்று 33,161 பேர் உட்பட மொத்தம் 19,65,939 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் இன்று 1644 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு, 21,404 பேர் சிகிச்சையில் உள்ளனர். கோவையில் இன்று 2,645 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு, 31,539 பேர் சிகிச்சையில் உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பிரியா

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

5 நிமிட வாசிப்பு

ஃபேஸ்புக் பெயர் மாறும் காரணம்?

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

3 நிமிட வாசிப்பு

பேருந்தில் படிக்கட்டு வழியாக கீழே விழுந்த பெண் பலி!

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

2 நிமிட வாசிப்பு

ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை: கடைக்கு சீல்!

ஞாயிறு 6 ஜுன் 2021