மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 6 ஜுன் 2021

பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தம்!

பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தம்!

கொரோனா அச்சம் காரணமாக மஞ்சூர் கூட்டுறவு தொழிற்சாலையில் பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் சில தனியார் தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. 65,000க்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் தேயிலை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இன்கோசர்வ் கட்டுப்பாட்டின் கீழ் 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை வழங்கி வருகின்றனர். இது தவிர 150-க்கும் மேற்பட்ட பெரிய, சிறிய தனியார் தேயிலை தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மஞ்சூர் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்குச் சுற்று வட்டாரத்தில் 30 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கொள்முதல் நிலையங்கள் மூலம் பச்சை தேயிலை வழங்கி வந்தனர். இதற்காக ஆங்காங்கே 15 கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

தற்போது மலைக்கிராமங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் கொள்முதல் நிலையங்களில் பணிபுரிபவர்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கையாக அந்த தொழிற்சாலையில் பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை நிர்வாகம் தங்களது உறுப்பினர்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் ‘தொழிற்சாலை உறுப்பினர்கள் வசிக்கும் இடங்களில் தொற்று பரவல் அதிகரித்து இருக்கிறது. இதனால் மறு அறிவிப்பு வரும் வரை பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தம் செய்யப்படுகிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கொரோனா பாதிப்பால் பல்வேறு இடங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து பணிக்குச் செல்லக் கூடாது என்று தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் முழு ஊரடங்கால் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து சென்று வருவதில் சிக்கல் உள்ளது.

இந்த நிலையில் கொரோனா அச்சத்தால் பச்சை தேயிலை கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளதால், விவசாயிகள் பச்சை தேயிலையை விநியோகம் செய்ய முடியாமல் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இதேபோல் சில தனியார் தேயிலை தொழிற்சாலைகள் மூடப்பட்டு உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

-ராஜ்

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

ஞாயிறு 6 ஜுன் 2021