மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

ஆசிரியர்கள் 20ம் தேதிக்குள் தடுப்பூசி போட வேண்டும்!

ஆசிரியர்கள் 20ம் தேதிக்குள் தடுப்பூசி போட வேண்டும்!

அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் ஜூன் 20ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி அனைத்து தரப்பினருக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. மக்களோடு தொடர்புடைய ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். காவலர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அந்தந்த துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ”அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத அலுவலக பணியாளர்கள் என அனைவரும் ஜூன் 20ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்களை பத்திரமாக வைத்திருக்கவும், தடுப்பூசி போடாதவர்கள் அதற்கான காரணத்தை ஆதாரத்துடன் பெற்று வைத்திருக்க வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உட்பட பல மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் இந்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தலின்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்துவதா, வேண்டாமா? என்ற ஆலோசனை நடைபெற்று வருகிறது. பிளஸ் 2 தேர்வு நடத்துவதற்கு முன்பு குறைந்தது இரண்டு வாரங்களாவது பள்ளிகளை நடத்த வேண்டும் என்று கல்வியாளர்கள் ஆலோசனை வழங்கியிருந்தனர். அதனால், பள்ளிகளை திறந்து மாணவர்களுக்கு இரண்டு வாரம் வகுப்புகளை நடத்தி, தேர்வுக்கு தயார்படுத்துவதற்கான பணிகளின் முன்னோட்டமாகதான் ஆசிரியர்கள் அனைவரும் 20ஆம் தேதிக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியிருப்பதாக கருத்து நிலவி வருகின்றது.

-வினிதா

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் ...

5 நிமிட வாசிப்பு

இந்த சமூகம் மாற்றுத் திறனாளிகளுக்கானதல்ல- மனுஷ்யபுத்திரன் வேதனை!

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

2 நிமிட வாசிப்பு

அரசு ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி!

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்! ...

4 நிமிட வாசிப்பு

நீட் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் : இந்திய மாணவர் சங்கம் போராட்டம்!

சனி 5 ஜுன் 2021