மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

தூத்துக்குடி போராட்டம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி!

தூத்துக்குடி போராட்டம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசாரால் தாக்குதலுக்கு உட்பட்ட 94 குடும்பங்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிவாரண நிதியை இன்று(ஜூன் 5) எம்.பி கனிமொழி வழங்கினார்.

கடந்த 2018ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு கடந்த ஆட்சியில் நிவாரண நிதி வழங்கப்பட்டது. போராட்டத்தின் போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்கு காயங்களும், பலருக்கு மனஉளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி, 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று தற்போதைய அரசு அறிவித்தது.

அதன்படி, இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் 94 குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து எம்.பி கனிமொழி ஒரு லட்ச ரூபாய் நிவாரண தொகையை வழங்கினார் .

இதுகுறித்து எம்.பி.கனிமொழி ட்விட்டரில், “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 94 பேரில், 93 பேருக்கு முதல்வர் அறிவித்த ரூபாய் 1 லட்சம் மற்றும் வேறு வழக்கில் கைதாகி மரணமடைந்தவரின் தாய்க்கு ரூ. 2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றேன்.நிகழ்ச்சியில் அமைச்சர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன், திருமிகு. கீதா ஜீவன், திரு. ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ, மாவட்ட ஆட்சியர் திரு. செந்தில்ராஜ், சார் ஆட்சியர் திரு. சிம்ரோன் ஜீத் சிங் காலோன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் வாரிசுதாரர்கள் 17 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வழக்குகளில், மத்திய குற்றபுலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர, ஏனைய வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-வினிதா

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

3 நிமிட வாசிப்பு

தீபாவளி போனஸ் : தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்!

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

சனி 5 ஜுன் 2021