மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

ராஜகோபாலனுக்கு ஜாமீன் மறுப்பு!

ராஜகோபாலனுக்கு ஜாமீன் மறுப்பு!

பாலியல் வழக்கில் சிறையில் உள்ள ராஜகோபாலனுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஜூன் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி போக்சோ நீதிமன்றத்தில் ராஜகோபாலன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிடையில் ராஜகோபாலனை ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி போலீசார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, மூன்று நாள் ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. அதன்படி, ஜூன் 1ஆம் தேதி முதல் 3ஆம் தேதி வரை ராஜகோபாலனிடம் அசோக் நகர் மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையை வீடியோவாக பதிவு செய்துள்ள போலீசார், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விதத்தை குற்றபத்திரிகையாக தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.

மூன்று நாட்கள் போலீஸ் விசாரணை முடிந்ததையடுத்து, நேற்று 3 மணியளவில் போக்சோ நீதிமன்றத்தில் ராஜகோபாலன் ஆஜர்படுத்தப்பட்டபோது, மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி.

இந்நிலையில் ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை இன்று(ஜூன் 5) நீதிபதி முகமது பரூக், விசாரித்தார். அப்போது, விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது. விசாரணை முழுமையாக முடிவடையாமல் ராஜகோபாலனுக்கு ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ராஜகோபாலனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

சனி 5 ஜுன் 2021