மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

துக்க நிகழ்ச்சிகளில் பரவும் கொரோனா!

துக்க நிகழ்ச்சிகளில் பரவும் கொரோனா!

துக்க நிகழ்ச்சிகளில்தான் கொரோனா பரவல் அதிகமாக இருக்கிறது என்றும், கொரோனா மற்றும் கொரோனா அல்லாத துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சேலம் இரும்பாலை வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கை அமைக்கும் பணிகளை இன்று(ஜூன் 5) ஆய்வு செய்த, சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சை பிரிவில் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “ தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மூலம், 17 மாவட்டங்களில் நோய் பரவல் குறைந்துள்ளது. 10 மாவட்டங்களில் பரவல் சற்று சவாலாக உள்ளது. ஒருநாளைக்கு 32 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்புகின்றனர்.

தமிழகத்தில் படிப்படியாக நோய் தொற்று குறைந்து வருகிறது என்று மக்கள் கவன குறைவாக இருக்க கூடாது. தொற்றிலிருந்து குணமடைந்தாலும், முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இறப்பு எண்ணிக்கையை குறைக்க முடியும்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கிராமம் மற்றும் நகர்புறங்களில் கொரோனா பரவலை தடுப்பதற்கான பழக்கவழக்கங்களை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். துக்க நிகழ்ச்சிகள் மூலம்தான் கொரோனா பரவல் அதிகரிக்கிறது. தஞ்சாவூரில் ஒரு இறப்பு நிகழ்வு மூலம் அதிகமானோருக்கு கொரோனா பரவல் ஏற்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் உணர்ச்சிவசப்பட்டு துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம். தொற்று குறைந்து வந்தாலும், திருமணம், இறப்பு, பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, கொரோனா மற்றும் கொரோனா அல்லாத இறப்பு நிகழ்வில் கலந்து கொள்வதை தவிர்ப்பது நல்லது.

மே மாதம் முதல், இரண்டாவது வாரத்தில் பெரும் சவாலாக இருந்த ஆக்சிஜன் தட்டுப்பாடு தற்போது போதுமான கையிருப்பில் உள்ளது. மேலும் ஆக்சிஜன் பெறுவதற்கான கூடுதல் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இதுவரை 95,ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 1.52 லட்சம் தடுப்பூசி கையிருப்பு உள்ளது. தமிழ்நாட்டில் 843 பேர் கருப்புபூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ வசதிகளை அதிகபடுத்தி வருங்கால தேவைகளை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.

-வினிதா

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் ...

3 நிமிட வாசிப்பு

நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை: வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நடப்படும் மரங்கள்!

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்! ...

3 நிமிட வாசிப்பு

தங்கப் பத்திரம் விற்பனை: இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம்!

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

4 நிமிட வாசிப்பு

மணிகண்டன் மரணம்: வெளியான சிசிடிவி காட்சிகள்!

சனி 5 ஜுன் 2021