மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

கல்லூரி ஆன்லைன் வகுப்புகள் : புதிய குழு நியமனம்!

கல்லூரி ஆன்லைன் வகுப்புகள் : புதிய குழு நியமனம்!

கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளில் புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பின்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து பல பள்ளிகளில் நடந்த பாலியல் தொல்லை சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

தமிழகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த பிரச்சினையைத் தொடர்ந்து, ஆன்லைன் வகுப்பு தொடர்பான விதிமுறைகளை உருவாக்கவும், ஆன்லைன் வகுப்புகளில் நடப்பதை வீடியோவாக பதிவு செய்யவும், இதற்காக ஒரு குழு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.

இந்நிலையில், கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளில் புதிய விதிமுறைகளை வகுக்க கல்லூரி கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.

இக்குழு கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்க அமைக்கப்பட்டுள்ளது.

நேரடி வகுப்புகளைப் போன்று மாணவர்கள், ஆசிரியர்கள் உடை அணிதல், ஆன்லைன் வகுப்பை கண்காணிக்க குழு அமைத்தல், வகுப்பை ரெக்கார்டு செய்தல், புகார் பிரிவினை உருவாக்குதல், இணைய வசதியை மேம்படுத்துதல் போன்ற பரிந்துரைகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆன்லைன் வகுப்பு தொடர்பான வரைவு அறிக்கையை வரும் 11ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

-வினிதா

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்! ...

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: நவம்பர் மாதத்துக்கான ஆன்லைன் புக்கிங் இன்று ஆரம்பம்!

இலங்கை கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

5 நிமிட வாசிப்பு

இலங்கை  கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது ஏன்?

சனி 5 ஜுன் 2021