மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

ரிலாக்ஸ் டைம்: தர்பூசணி பாயசம்!

ரிலாக்ஸ் டைம்: தர்பூசணி பாயசம்!

கடைகள் மூடப்பட்டிருந்தாலும் நடமாடும் வாகன கடைகள் மூலம் பழங்கள் விற்பனை அமோகமாக நடந்துவருகிறது. தற்போது மலிவாகக் கிடைக்கும் தர்பூசணியில் ஜூஸ் செய்து சாப்பிட்டு அலுத்தவர்கள், தர்பூசணி பாயசம் செய்து சுவைக்கலாம்.

எப்படிச் செய்வது?

கால் கப் ஓட்ஸைச் சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும். அரை லிட்டர் பாலைக் கொதிக்கவைத்து ஆறவிடவும். பின்னர் அகன்ற பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். ஓட்ஸ் மாவைச் சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்கும் நீரில் ஊற்றி கிளறிவிடவும். ஓட்ஸ் வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும். பின்னர் பால் ஊற்றி ஒரு கொதி வந்ததும் அரை கப் தர்பூசணி சாற்றை ஊற்றி கிளறி இறக்கி விடவும். பாதாம், முந்திரி பருப்பை நெய்யில் வறுத்து பாயாசத்துடன் சேர்த்து பரிமாறலாம்.

சிறப்பு

தர்பூசணியில் 90 சதவிகித அளவுக்கு நீர் உள்ளது. கோடைக்காலங்களில் இதைச் சாப்பிட்டால் நீரிழப்பு (Dehydration) பிரச்சினைகள் ஏற்படாது. நடுத்தர வயதினரின் உயர் ரத்த அழுத்தத்தைத் தர்பூசணி குறைக்கும். தமனிகள் சிறப்பாகச் செயல்படவும் உதவும். பொட்டாசியமும் அதிக அளவில் உள்ளதால் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். இதயத்துடிப்பைச் சீராக்கும்.

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

4 நிமிட வாசிப்பு

உடல் பருமன்: மாணவி தற்கொலை!

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

6 நிமிட வாசிப்பு

தஞ்சை மாணவி மரணம்: பள்ளி விளக்கம்!

மீண்டும் உயரும் கொரோனா!

6 நிமிட வாசிப்பு

மீண்டும் உயரும் கொரோனா!

சனி 5 ஜுன் 2021