மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

ஊரடங்கில் அதிகரித்த குடும்ப வன்முறை!

ஊரடங்கில் அதிகரித்த குடும்ப வன்முறை!

பெண்கள் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட 181 என்ற இலவச தொலைபேசி மூலம் இந்தாண்டு மட்டும் 5700 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டதை விட அதிகம்.

கடந்த 2018ஆம் ஆண்டு தமிழகத்தில் 181 என்ற இலவச தொலைபேசி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் 181 மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உதவி எண் மூலம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை, பாலியல் தொல்லை, உடல், மனநலப் பாதிப்பு, பெண்களுக்காக அரசின் திட்டங்கள், பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படும் உதவித் தொகை போன்ற உதவிகளை பெறலாம். இந்த மையத்தில் 5 வழக்கறிஞர்கள், 5 மன நல ஆலோசகர்கள், 1 தகவல் தொழில்நுட்ப வல்லுநர் உள்ளனர்.

181 என்ற எண்ணிற்கு வரும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020-21 ஆண்டில் கிட்டதட்ட 5,700 புகார்கள் வந்துள்ளதாக சமூக நலத் துறை தெரிவித்துள்ளது. பாலியல் தொல்லை, குடும்ப வன்முறை உள்ளிட்டவை குறித்து 1540 புகார்கள் வந்துள்ளன. இது கடந்த ஆண்டில் 1231 ஆக இருந்தது. திருமணம் சார்ந்த பிரச்சனைகள் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை 1110லிருந்து 1510 ஆக அதிகரித்துள்ளது. மனநல ஆலோசனை கேட்டு கால் செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் 200லிருந்து 295 ஆக அதிகரித்துள்ளது.

ஊரடங்கு காலத்தில்தான் அதிகமான புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. ஊரடங்கு காரணமாக பெரும்பாலான பெண்கள் வீட்டிலிருந்து வேலை செய்து வருகின்றனர். இதனால், தங்களின் இ-மெயில், முகநூல் உள்ளிட்டவைகளை பார்த்து, தங்களது கணவன்மார்கள் சந்தேகப்பட்டு அடிப்பதாக பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தமுறை புகார் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம் என சமூக நலத் துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார்.

இதுகுறித்து மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் கெளரி அசோகன் கூறுகையில், ”குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவு உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியே வருவதற்கு தயங்குகின்றனர். அதனால், அதுகுறித்த விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

இங்கு வரும் புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த விழிப்புணர்வு பலருக்கு இல்லை. சிட்டியில் இருக்கும் பெண்களில் பலருக்கும் இதுபற்றி தெரியவில்லை. இதுகுறித்து பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால், இங்கு வரும் புகார்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என பெண்கள் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த ரேணுகா கூறுகிறார்.

-வினிதா

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

2 நிமிட வாசிப்பு

பெயரைச் சொல்லுங்கள் நடவடிக்கை உறுதி: ராஜகண்ணப்பன்

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... ...

4 நிமிட வாசிப்பு

பாரத ஸ்டேட் வங்கிக்கு ரூ.1 கோடி அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி... எதற்காக?

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

ஓடிபி மூலம் பண மோசடி: காவல் துறையின் அறிவிப்பு!

சனி 5 ஜுன் 2021