மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 5 ஜுன் 2021

மருமகளைக் கட்டிப்பிடித்து கொரோனாவைப் பரப்பிய மாமியார்!

மருமகளைக் கட்டிப்பிடித்து கொரோனாவைப் பரப்பிய மாமியார்!

மருமகளைப் பழிவாங்க கட்டிப்பிடித்து கொரோனா தொற்றைப் பரப்பிய மாமியாரின் விரோதச் செயல், தெலங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலங்கானா மாநிலம், ராஜன்னா சிர்சிலா மாவட்டத்திலுள்ள நெமிலி குட்டாதண்ட பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு, காமரெட்டி பகுதியைச் சேர்ந்த டிராக்டர் ஓட்டுநருடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்துக்குப் பின் மாமியாருடன் அந்தப் பெண்ணுக்கு அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. தற்போது அந்தப் பெண்ணின் கணவர் ஒடிசாவில் தங்கி கூலிக்கு டிராக்டர் ஓட்டி வருகிறார். இதனால், மருமகளும் மாமியாரும், எலியும் பூனையுமாக அடிக்கடி சண்டைப் போட்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், கடந்த வாரம் மாமியாருக்குக் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் காரணமாக, அவர் வீட்டுக்குள் இருக்கிற ஓர் அறையில் தனிமைப்படுத்தப்பட்டார். தொற்று பாதித்த மாமியாரிடமிருந்து மருமகள் சமூக விலகலைக் கடைப்பிடித்திருக்கிறார். சாப்பாடு, தண்ணியை தனியாகக் கொடுத்து வந்ததாலும், பேச துணையில்லாததாலும் வெறுப்பான மாமியாரோ, மருமகள் மீது கோபத்தை கொட்டியிருக்கிறார்.

இதனால், அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. கொதித்துப்போன மாமியாரோ, “நான் இங்க தனிமையில செத்துட்டிருக்கேன். நீ மட்டும் சந்தோஷமா இருக்கியா? உனக்கும் கொரோனா வந்தால்தான். என் நிலைமைப் புரியும்” என்றபடியே வேகமாக ஓடிவந்து மருமகளை கட்டிப்பிடித்திருக்கிறார். இப்படி அடிக்கடி செய்திருக்கிறார். இதனால், மருமகளுக்கும் தொற்று பரவியது.

இதையே காரணம் காட்டி மருமகளை வீட்டிலிருந்தும் துரத்தியிருக்கிறார் அவரின் மாமியார். வேறு வழித் தெரியாமல், தன் சகோதரியின் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சைப் பெற்று வருகிறார் அந்த மருமகள்.

இதுதொடர்பாக, வீட்டுக்கு வந்து விசாரணை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளிடம், மாமியாரின் அட்டூழியங்களை குறையாக கொட்டித் தீர்த்திருக்கிறார் அந்த மருமகள். மாமியார், மருமகள் சண்டையாக இருந்தாலும் இப்படியா பழித் தீர்ப்பது என்று புலம்புகிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

-ராஜ்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

சனி 5 ஜுன் 2021