மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும்: விக்கிரமராஜா

கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும்: விக்கிரமராஜா

வியாபாரிகள் பாதிக்கப்படுவதால் ஊரடங்கில் தளர்வுகளை ஏற்படுத்தி கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு ஒரு மாதத்துக்கு வேண்டிய மளிகை பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விக்கிரமராஜா, “தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே தமிழக அரசு, ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து மீண்டும் கடைகளைத் திறக்க அனுமதிக்க கோரி முதலமைச்சரைச் சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீடு, வீடாகச் சென்று பொருட்கள் விற்பனை செய்யும் புதிய வியாபாரிகள், அதிக லாப நோக்கில்லாமல் நியாயமான விலையில் பொருட்களை விற்க வேண்டும். மீறினால் அவர்கள் வியாபாரம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படும்” என்றவர்...

“சென்னை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் கட்டுப்பட்டில் செயல்படும் கடைகளில் வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு ‘சீல்’ வைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே வியாபாரிகள் வாங்கியுள்ள கடனுக்கு மாத தவணை கட்டுவதில் இருந்து ஆறு மாதக் காலம் அவகாசம் தர வேண்டும். இதற்கு மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சரிடம் வலியுறுத்துவோம்” என்று கூறியுள்ளார்.

-ராஜ்

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

3 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு : ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசில் பணி!

சிறப்பு கட்டுரை: கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு! ...

18 நிமிட வாசிப்பு

சிறப்பு கட்டுரை:  கராச்சி வீதிகள் சொல்லும் பிரியாணியின் வரலாறு!

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

4 நிமிட வாசிப்பு

ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்திருந்த அரசு நிலம் மீட்பு!

வெள்ளி 4 ஜுன் 2021