மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 4 ஜுன் 2021

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பீர் இலவசம்!

தடுப்பூசி செலுத்திக்கொண்டால் பீர் இலவசம்!

அமெரிக்காவில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு இலவசமாக பீர் வழங்கப்படும் என்ற கவர்ச்சிகர அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவும் முக்கிய இடத்தில் உள்ளது. கொரோனா வைரஸால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் அமெரிக்கா சந்தித்துள்ளது. ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் நாடு முழுவதும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தடுப்பூசி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அமெரிக்காவில் மாடர்னா, பைசர்/பையோஎன்டெக் மற்றும் ஜான்சன் அண்டு ஜான்சன் ஆகிய நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இதுவரை மொத்தம் 29,69,12,892 தடுப்பூசி டோஸ்கள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவில் இதுவரை 16,87,34,435 பேர் முதல் டோஸ் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டதாகவும், 13,61,55,250 பேர் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்டதாகவும் அமெரிக்க சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

வரும் ஜூலை 4ஆம் தேதி அமெரிக்க சுதந்திர தினத்துக்குள் 70 சதவிகித மக்களுக்குக் குறைந்தபட்ச ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்த வேண்டும் என்ற இலக்கை ஜனாதிபதி பைடன் அரசு முடுக்கிவிட்டுள்ளது. தற்போது வரை 63 சதவிகிதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தடுப்பூசி செலுத்த மக்களை ஊக்குவிக்க புதிய முறையை அமெரிக்க மதுபான தயாரிப்பு நிறுவனமான அன்ஹீசர் - புஷ்ச் கையாண்டு உள்ளது. அதன்படி குறிப்பிட்ட நாளுக்குள் தடுப்பூசி இலக்கு அடையப்பட்டால் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக பீர் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதேபோல் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள நான்கு முன்னணி குழந்தைகள் பராமரிப்பு நிறுவனம் முன்வந்து உள்ளது.

-ராஜ்

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வெள்ளி 4 ஜுன் 2021